55. திசை மாறியத் தென்றல்கள் | DISTRACTED WINDS
Description
ஓராண்டின் ஓட்டத்தில் ஓடுகின்ற ஓடங்கள்-தங்கள்
ஓட்டத்தில் ஓயவில்லை.
புலராத காலைப்பொழுது இக்கால ஓட்டத்தில்
மலராமல் இருக்கவில்லை.
சாயாத கதிரவன் காலக்கணக்கில் புலியாகச்
சாய மறக்கவில்லை.
பூக்காத புஷ்பச்செடிகளும் பொழுது புலர்ந்தவுடன்
இதழ்விரிக்கத் தவறவில்லை.
மயங்காத நாசித்துவாரத்தில் மணம்புகுத்தும் மலர்
மாலையில்மலர மயங்கவில்லை.
விரித்த தன்நீண்ட விரிகதிர்களை சுருக்கிகதிரவன்
மடங்கத் தயங்கவில்லை.
ஏடுசுமந்து சாலைசெல்லும் காலவழி அன்றும்
என்றும் மாறுவதில்லை.
மனஆழத்தில் மடங்கியிருந்த ஏக்கங்களும் வேதனைகளும்
மாறிவிடவில்லை தன்னைமறந்து.
எழுத்துக்களில் கோர்த்த கண்ணீர்வெள்ளம் எப்பொழுதும்
எழுந்தோடி னதில்லை.
ஏழுஜென்ம ஏதட்சனைகளும் ஏடுகளுக்கு கரைகட்டி
ஏமாப்பு எழுப்பாமலில்லை.
தளர்ந்த தாகம்தீர்க்கத் தண்ணீரன்றி பாலைவனச்சோலைகள்
கண்முன் ஓடாமலில்லை.
விரிந்த வேகம் விண்ணளவில் ஓடிமனதளவில்
தளரத் தயங்கவில்லை.























